ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிம வாழ்வு கொடுக்க நம்ம இயேசு சாமி பொறந்துட்டாரு


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிம வாழ்வு

கொடுக்க நம்ம இயேசு சாமி பொறந்துட்டாரு

படைக்கப்பட்ட எல்லாருக்கும் பரலோகம்

கெடைக்க நம்ம இயேசு சாமி பொறந்துட்டாரு

கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடா மேளம் கொட்டுங்கடா

தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடா தாளம் தட்டுங்கடா


1. அடிம யாரும் இல்ல அரசன் யாரும் இல்ல

அனைவரும் சம மனுஷருன்னு சொல்ல வந்தாரு

ஆணும் இங்க இல்ல பெண்ணும் இங்கு இல்ல

அனைவரும் அவர் பிள்ளைங்கன்னு சொல்ல வந்தாரு

உயர்ந்தவனும் இல்ல தாழ்ந்தவனும் இல்ல

உருப்படாத வித்தியாசத்த ஒழிக்க வந்தாரு

பெரியவனும் இல்ல சின்னவனும் இல்ல

நல்லவனா எல்லாரையும் மாத்த வந்தாரு

இனி தாழ்ந்தவங்க உயர்ந்தவங்க ஆகும் காலமிது

இனி சின்னவங்க பெரியவங்க ஆகும் வேளையிது


2. ஏழ யாரும் இல்ல பணக்காரன் யாரும் இல்ல

எல்லாரும் அவர் ஆட்சியில ஒண்ணு இன்னாரு

மேத யாரும் இல்ல பேத யாரும் இல்ல

தேவஞானம் எல்லாருக்கும் தேவையின்னாரு

பாவி யாரும் இல்ல புனிதன் யாரும் இல்ல

பாகுபாடு போக்கி பாவம் போக்க வந்தாரு

தலைவன் யாரும் இல்ல தொண்டன் யாரும் இல்ல

தலக்கனத்த தகர்க்கும்படி செய்யச் சொன்னாரு

இனி ஏழைகளும் செல்வராகும் நல்ல காலமிது

இனி பாவிகளும் புனிதராகும் நல்ல வேளையிது