குழந்தை இயேசுவே குவலயம் எழுகவே அற்புதமான கரங்களால் உந்தன் அருளைப் பொழிகவே


குழந்தை இயேசுவே குவலயம் எழுகவே

அற்புதமான கரங்களால் உந்தன் அருளைப் பொழிகவே

வருவாய் தருவாய் வரங்கள் அருளுவாய்


1. அன்னை மரியின் கரத்தினிலே

அவனியில் வளர்ந்த ஆரமுதே

அண்டி வந்தோர்க்கு அடைக்கலமே

அஞ்சி வாழ்வோர்க்குப் படைக்கலனே

அரவணைத்திடுவாய் ஆறுதல் தருவாய்

ஆனந்தம் பொங்கிட வரமருள்வாய்


2. வானோர் வாழ்த்தும் பாக்களிலே

வாழ்ந்திடும் எங்கள் குலக்கொழுந்தே

ஏங்கித் தவிப்போர்க்கு விடிவெள்ளியே

ஏக்கம் போக்கும் எங்கள் ஒளிவிளக்கே

வான்மழை பொழிவாய் வசந்தங்கள் அருள்வாய்

வாடிடும் வறியவர் துயர் துடைப்பாய்