♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள்
அப்பமாய் கொண்டு வந்தோம்
சிந்திடும் கண்ணீர் சிதறிடும் செந்நீர்
கிண்ணத்தில் தருகின்றோம் (2)
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் எம்மை மாற்றிடுவீர்
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் வாழ்வின் உணவாய் மாற்றிடுவீர்
1. கோதுமை மணிகள் நொறுங்கும் மனங்கள் மகிழ வேண்டுமே
பகிர்ந்து வாழும் புதிய உலகம் படைக்க வேண்டுமே (2)
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர்...
2. அடிமைத் தனங்கள் அடக்கு முறைகள் அழிய வேண்டுமே
தேவனின் ஆட்சி மனித மாட்சி வளர வேண்டுமே (2)
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர்...