♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உதிர்ந்து போன பூவானேன் உடைந்துவிட்ட கலமானேன்
மடிந்துபோன செடியானேன் இறைவா
உன்னில் இணையாத கிளையானேன் இறைவா (2)
1. பூத்திருக்கும் பூக்களெல்லாம் இன்பம் தரும் என்றிருந்தேன்
பாய்ந்து வரும் அருவியெல்லாம்
பாச மழை பொழியும் என்றேன் (2)
அத்தனையும் பொய்த்துவிட்ட
நிலை உணர்ந்து உனையடைதேன் ஆ (2)
இறைவா உன்னில் நான் சரணடைந்தேன்
2. அயலானின் வாழ்வினிலே அன்பைத் தர நான் மறந்தேன்
தேடிவந்த நண்பரிலே நன்மை செய்ய நான் மறுத்தேன் (2)
உடன் இணையா பெற நினைக்கும் தாழ்நிலையை
உணர்ந்து விட்டேன் ஆ...(2)
இறைவா உன்னில் நான் சரணடைந்தேன்