♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அன்பின் தாலாட்டிலே பாலனை
செல்லமாய் தாலாட்டினோம் (2)
கன்னிமரியின் செல்வமே இறையன்பின் வெள்ளமே
என்றும் கருணை உள்ளமே
கண்ணயராயோ கண்ணயராயோ
1. கண்மணியின் பாலகா காத்திருந்தோம் காத்திருந்தோம்
புவியில் அவதரிக்கவே (2)
இருள்நீக்கும் ஒளியாக என் நெஞ்சில் வா
புவி அழகே வானமுதே கண்ணயராயோ - 2
2. விண்ணுலகம் வாழ்த்துதே மண்ணுலகம் மகிழுதே
உந்தன் வருகையினாலே (2)
புதுவாழ்வு மலர்கின்ற நிலவே நீ வா
என் உயிரே என் உறவே கண்ணயராயோ - 2