என் இறைவன் இயேசு என் இதயம் தேடி எழுந்து வரும் வேளையிது உணவாய் எழுந்து வரும் வேளையிது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் இறைவன் இயேசு என் இதயம் தேடி

எழுந்து வரும் வேளையிது உணவாய்

எழுந்து வரும் வேளையிது (2)


1. அன்பு செய்து வாழுங்கள் என்று சொன்ன இயேசுவே

நமது இதயம் தேடி வருகிறார்

பாவக் கறைகள் போக்கியே பரிசுத்தமாக்கவே

பரமன் இயேசு நம்மில் வருகிறார்

முடிவில்லாத வாழ்வையே மானிடர்க்கு அருளவே

மாட்சியோடு தேவன் வருகிறார் ஆ

அழிவில்லாத உணவென தன்னையே தந்து நம்

ஆத்துமாவின் பசியைப் போக்கினார்


2. வெறுமையான நம்மையே செல்வராக ஆக்கிட

இயேசு உம்மைத் தேடி வருகிறார்

பிரிவில்லாத உறவையே நிரந்தரமாய்த் தந்திட

மகிழ்ச்சியோடு விருந்து தருகிறார்

இறைவன் என்னில் எழுந்ததால் இன்பம் என்னில் நிறைந்ததால்

துயரமேகம் கலைந்து போனதே ஆ

இதயக்கதவு திறந்ததால் புதிய ஒளி பிறந்ததால்

இருளின் ஆட்சி மறைந்து போனதே


3. வண்ணமலர் கூட்டமாய் எனது இதயம் ஆனதே

இறைவன் இங்கு எழுந்து வந்ததால்

அமுதம் சிந்தும் கனிகளின் உறைவிடம் ஆனதே

இதயதேவன் நிறைவைத் தந்ததால்

அருவியாகத் துள்ளுதே ஆற்றல்மிகக் கொள்ளுதே

அன்பர் இயேசு என்னில் வந்ததால் ஆ

பறவைகளின் பாடலில் என்னிதயம் சேர்ந்ததே

இயேசு என்னை மீட்டுகின்றதால்