♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மங்கள மேளம் கொட்டி கொண்டாடுவோம்
பெண்களில் பேறுபெற்ற அம்மா மரி - 2
நீ மடுவில் எழுந்தாய் விடிவைக் கொணர்ந்தாய்
தமிழீழம் மலரவே எமது குறையாவும் தீரவே
சரணம் மடுமாதா எங்கள் சந்தோசமே நீதான் - 2
1. முல்லை வளம் கொழிக்கும் தெள்ளுத்தமிழரிடை
மாதா நீ எழுந்தாய்
நெல்லும் மணியும் பல செல்வக்கனி வளங்கள்
பெருகிட அருள் புரிந்தாய் (2)
உந்தன் அன்பான ஆலயமே எம் தெம்பான கோட்டையம்மா
உன் கண்ணான திருமகனே எம் பொன்னான வாழ்க்கையம்மா
மடுஅன்னை உன்தலம் எமக்கு அடைக்கலம் மரியே வாழ்கவே
சரணம் மடுமாதா எங்கள் சந்தோசமே நீதான் - 2
2. கண்ணின் மணி போலே எம்மைக் காக்கும் இறை
பாலனை ஏந்தி வந்தாய்
இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செப
மாலையை எமக்குத் தந்தாய்
நீ சந்தித்த வாழ்வெல்லாம் மிக சந்தோசமானதம்மா
உம்மை நம்பிக் கொண்டாடுகிறோம் எம்மை
நற்கதியில் சேருமம்மா - மடு அன்னை ... ...