♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா
உமதன்பு படைப்புகளை நேசிக்கின்றேன் இறைவா
உன் கரத்தின் வல்லமை உணர்கின்றேன் இறைவா
உம் முகத்தைப் படைப்பினில் காணுகின்றேன் இறைவா
இறைவா இறைவா உயிரான இறைவா உடன்வாழும் இறைவா
1. வானம் பூமி கடல் யாவும் நேசிக்கின்றேன் இறைவா
கானம் பாடும் பறவைகளை நேசிக்கின்றேன் இறைவா
அதிகாலை பனிப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா
அழகு மலர்கள் புல்வெளிகள் நேசிக்கின்றேன் இறைவா
உன் புகழ் உரைக்கின்றேன் உதயம் ஆகிறாய் - 2
உன் பதம் பணிகின்றேன் ஒளி விளக்காகிறாய்
அழகிய எம் உலகை அணைத்துக் காத்திடவே
அன்பால் நிறைத்திடவே ஆற்றல் தருகின்றாய்
இறைவா இறைவா உயிரான இறைவா உடன்வாழும் இறைவா
2. கதிரவனை முழுநிலவை நேசிக்கின்றேன் இறைவா
தவழும் நதி வீசும் தென்றல் நேசிக்கின்றேன் இறைவா
நீலவானில் நீந்தும் மேகம் நேசிக்கின்றேன் இறைவா
வான் பொழியும் மழைப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா
இயற்கையில் சங்கமித்து உன்னைக் காணுகின்றேன் - 2
இறையுன் படைப்போடு ஒன்றாய்ப் பாடுவேன்
எல்லா உயிர்களுமே என்றும் வாழ்ந்திடணும்
எல்லா மாந்தருமே மகிழ்வைக் கண்டிடணும்
இறைவா இறைவா உயிரான இறைவா உடன்வாழும் இறைவா