♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உன்னைப் பிரிந்திட மனம் துணியேன்
உன்னைப் பிரிந்திடேன் இயேசையா (2)
எந்தன் உடலில் உயிருள்ள வரைக்கும் - 2
உன்னை நான் பிரியேன்
உன்னைப் பிரிந்திட மனம் துணியேன்
அன்புள்ள இறைவா ஆருயிர் நண்பா
உன்னை நான் மறவேன் (2)
1. ஆன்ம தாகம் என்னிலே விதைக்க
எனக்கென நீயே இறையிடம் செபித்தாயோ (2)
தோழனாய் நெருங்கி இறையிடம் சேர்க்க
எனக்கென அழுதாயோ
2. ஆறுதல் அளித்து தேற்றிட எனக்கு
அருகினில் நீயே அன்பனாய் நின்றாயோ (2)
யாம் தரும் அருளே போதுமென்றெனக்கு
பொழிந்திட வந்தாயோ