வெள்ளி நிலா ஓடத்திலே வீற்றிருக்கும் தாய்மரியே


வெள்ளி நிலா ஓடத்திலே வீற்றிருக்கும் தாய்மரியே

துள்ளிவரும் துன்பஅலை சூழ்ந்து என்னில் மோதுதம்மா

வெள்ளத்திலே மூழ்குகிறேன் வேதனையில் வாடுகிறேன்

அள்ளி என்னைக் கரைசேர்க்க அருட்கரத்தைத் தாருமம்மா


1. அன்னை என்றும் தந்தை என்றும்

உறவு சொல்லி வந்தவர்கள்

அன்புமொழிபேசி என்னைப்

பயன்படுத்திக் கொண்டவர்கள் (2)

இன்னலிலே தவிக்கவிட்டு எனைமறந்து போகும்போது -2

அன்னை என்று உனையழைத்தேன்

அருட்கரத்தைத் தாருமம்மா


2. கோயிலிலே குடியிருப்பாய் என்று நான் நம்பி வந்தேன்

வழியினிலே காவல் நின்றாய் வழிநெடுக நடந்து வந்தாய் (2)

பாயினிலே படுத்திருந்தேன் பக்கத்திலே அமந்திருந்தாய் - 2

தாய் என்று தாவுகிறேன் அருட்கரத்தைத் தாருமம்மா