♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இறைவன் நமது வானகத் தந்தை
இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை
குறைகள் தீரும் கவலைகள் மாறும்
குழம்பிய மனதில் அமைதி வந்தேறும்
இறைவன் நமது வானகத் தந்தை
1. பறவைகள் விதைப்பதும் அறுப்பதுமில்லை
பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை (2)
மறந்துவிடாமல் அவைகளுக்குணவு - 2
வாரி வழங்கிப் பேணியே காக்கும் - 3
2. வயல்வெளி மலர்களைப் பாரீர் அவைகள்
வருந்தி உழைப்பதும் நூற்பதுமில்லை (2)
மயங்கிட வைக்கும் இவைபோல் சாலமோன் - 2
மன்னனும் என்றும் உடுத்தியதில்லை - 3