♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நன்மைகள் செய்த இறைவனுக்கு
நன்றியின் பலியைச் செலுத்திட வாரீர் -2
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்
1. உள்ளத்தைத் தருவது திருப்பலியாம்
உடைந்ததென்றால் அது பெரும்பலியாம் (2)
கொடைகள் பெறுவது தகும் வழியாம் -2
குறையினைப் போக்கும் கோவழியாம்
2. வானத்தை நோக்கிடும் நறும் புகைபோல்
வாருங்கள் உள்ளத்தை எழுப்பிடுவோம் (2)
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தோம் -2
ஆண்டவன் திருமுன் படைத்திடுவோம்