நன்றி நன்றி நல்ல தேவனே நன்மை புரியும் வல்ல தெய்வமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நன்றி நன்றி நல்ல தேவனே

நன்மை புரியும் வல்ல தெய்வமே (2)

ஏழு ஸ்வரங்களில் இனிய ராகத்தால்

ஏற்றிப் போற்றிப் புகழ்ந்து பாடுவேன் (2)


1. உந்தன் கைகளில் எனது பெயரையே

உரிமையாகப் பொறித்து வைத்தீரே (2)

முன்னும் பின்னுமே எங்கும் சூழ்ந்துமே

என்றும் என்னைப் பாதுகாத்தீரே (2)

நன்றி நன்றி நல்ல தேவனே


2. உந்தன் சிறகினில் என்னைச் சுமந்துமே

இறுகப் பற்றி அரவணைத்தீரே (2)

எந்தன் திறமைகள் ஆற்றல் அனைத்துமே

உந்தன் அன்பில் உணரச் செய்தீரே (2)

நன்றி நன்றி நல்ல தேவனே