வருவாய் இன்று கிறிஸ்தவக் குலமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வருவாய் இன்று கிறிஸ்தவக் குலமே

கிறிஸ்து விடுத்த அழைப்பினை ஏற்று - வருவாய்


1. வேதத்தின் நிறைவாம் வார்த்தையளிக்கும்

விருந்தினை உண்ண விரைவாய் குலமே (2)

உண்பவர் எல்லாம் ஓர் குலமாகி -2

உன்னத பலியை உவந்தே செலுத்த - வருவாய்


2. திருநீராட்டால் வந்தது உரிமை

திருப்பலி தனையே செலுத்தும் அருமை (2)

கிறிஸ்துவை அறியா உலகுக்குப் புதுமை -2

கிறிஸ்தவக் குலமே உந்தன் பெருமை - வருவாய்