♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அன்பனே என்னுள்ளம் எழுந்திட வா
என் இயேசுவே என் ஜீவன் நீயல்லவா (2)
காலங்கள் மாறினும் கோலங்கள் மாறினும்
நம் சொந்தம் என்றென்றும் மாறாதய்யா (2)
1. வாழ்வில் இனிமை நீயல்லவா உன்
வாசல் தேடி வருகின்றேன் (2)
கலங்கரை தீபம் நீயல்லவா இருளை நீக்கும் ஒளியல்லவா
என் உயிரே உறவே எனைத் தேற்றவா
2. அன்பின் ஊற்றே நீயல்லவா உன்
ஆற்றல் எனைத் தாங்க விழைகின்றேன் (2)
ஆறுதல் சொல்லும் மொழியல்லவா
சிறகினில் அணைக்கும் தாயல்லவா
என் உயிரே உறவே எனைத் தேற்றவா