♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வந்துபாரும் எம் இறைவா வந்து பாரும் - 3
அமைதி வாழ்வு குலைந்து போன
யாழ்ப்பாணத்தின் அலங்கோலம் - வந்துபாரும்...
1. உமது மக்களும் அவர்கள் மண்ணும்
தீக்கிரையாய் போன நிலையை - வந்துபாரும்...
2. மீன்கள் பாட கலைவளர்த்த
மட்டுநகர் பட்ட கோலம் - வந்தது - வந்துபாரும்...
3. நாளும் ஒன்றாய் வாழ்ந்த இனம்
சூழ்ச்சியனால் பிரியும் நிலையை - வந்துபாரும்...
4. வீடிழந்து நிலமிழந்து ஊர் பிரிந்த
மக்கள் படும் துயரை - வந்துபாரும்...