பெத்லகேம் ஊருக்குச் சென்றிடுவோம் அந்த பாலனைக் கண்டிடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பெத்லகேம் ஊருக்குச் சென்றிடுவோம் - அந்த

பாலனைக் கண்டிடுவோம்

பேரின்பம் அனைத்தும் குழந்தை வடிவில்

ஒளிரும் காட்சியைக் கண்டிடுவோம்


1. உண்மை ஒளியாய் உதித்ததே

வேற்றுமை அகற்றப் பிறந்ததே (2)

இறைமை வடிவைக் கொணர்ந்ததே - 2

மாமரியின் நல்மகனாய் மனித உருவை எடுத்ததே - 2


2. இருண்ட உலகை மீட்கவே மருண்ட மனதைத் தேற்றவே - 2

உலகின் ஒளியாய் பிறந்தாரே (2)

உள்ளமதைக் கொள்ளை கொள்ளும்

குழந்தை வடிவில் உதித்தாரே - 2