நீயாக நான் மாற நிதம் உந்தன் பணி செய்ய ஆக்குவாய் தேவா உருவாக்குவாய் மாற்றுவாய் நாதா எனை மாற்றுவாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீயாக நான் மாற நிதம் உந்தன் பணி செய்ய

ஆக்குவாய் தேவா உருவாக்குவாய்

மாற்றுவாய் நாதா எனை மாற்றுவாய் (2)


1. எளியோர்க்கு நற்செய்தி சொல்லிட

சிறைப்பட்டோர்க்கு விடுதலை வழங்கிட (2)

குருடருக்கு பார்வையுமே அளித்திட -2

அருள் தந்து எனை இன்று அனுப்புமே (இயேசுவே) - 2


2. ஆண்டவன் அருளாண்டை அறிவிக்க

அன்பினால் அனைவரையும் ஆட்கொள்ள (2)

அவனியிலே உமதரசை எழுப்பிட -2

அருள் தந்து எனை இன்று அனுப்புமே (இயேசுவே) - 2