இயேசு இயேசு பாவத்தில் வீழ்ந்த பாவி என்னை பரிவோடு எடுத்து அணைப்பது ஏன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு இயேசு பாவத்தில் வீழ்ந்த பாவி என்னை

பரிவோடு எடுத்து அணைப்பது ஏன்

என்ன செய்வேன் நான் உமக்காக

உம்மையே தருகிறீர் எமக்காக


1. பாவத்திற்கு கூலி மரணம் - 2

பாம்பைப்போல் பாவம் என்னைத் தொடரும் - 2

அதற்காய் தானோ அழுதீரோ

தந்தாய் என் பிள்ளைகளை மன்னியும் என்று

கல்வாரியில் கதறினீரோ 2 - என்ன செய்வேன் நான்


2. உம்மை மறந்தேன் என்னையே இழந்தேன் - 2

காய்ந்த மரமாய் மாறிப்போனேன் - 2

அதற்காய் தானோ அழுதீரோ

தாகமாய் நான் இருக்கிறேனென்று

எனை வாழவைக்க நீரழுதீரோ 2 - என்ன செய்வேன் நான்