♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசுவே என்றும் என்னுடன் இருந்து
என்னை நடத்துமையா
என்னை முழுதும் உந்தன் பாதத்தில்
அர்ப்பணம் தந்தேனய்யா (2)
1. கலங்காதே மகனே என்றழைத்து தம்
கைகளில் என்னைத் தாங்குகின்றார் (2)
கடவுள் நான் உன்னருகில் காலமும் இருப்பேன் என்கின்றார் -2
2. வலிமையும் திடமும் நானாவேன் நம்
வலக்கரம் உன்னைக் காக்கும் என்றார் (2)
எதிரிகள் உன்னைச் சூழ்ந்தாலும்
என் பெயர் உன்னை மீட்கும் என்றார் (2)