உறவே மனிதம் உறவே புனிதம் உறவே உண்மை தெய்வம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உறவே மனிதம் உறவே புனிதம்

உறவே உண்மை தெய்வம் (2)

மனங்கள் இணைய மலரும் எங்கும் இறைவன் ஆட்சியே

மண்ணில் நாமெல்லாம் அதற்கு சாட்சியே


1. பிறக்கும் போது உலகில் நாமும் தேடி வந்ததென்ன

அன்புச் செல்வம் அல்லவா

இறக்கும்போது இங்கிருந்து எடுத்துச் செல்வதென்ன

உறவு ஒன்றே அல்லவா (2)

தன்னை வழங்கும் தியாகமாகவே

தெய்வம் கண்களில் தெரியும் நேரிலே

பிறருக்காக ஆற்றும் பணியிலே

பிறப்பின் மேன்மை புரியும் பாரிலே

வாழுவோம் அன்பிலே பண்பிலே

வளருவோம் உறவிலே மனித நிறைவிலே


2. ஏற்றத் தாழ்வு அகற்றி வாழ்ந்தால் மகிழ்வு இல்லையா

எங்கும் வளமை இல்லையா

மக்கள் கைகள் இணைந்தால் ஆற்றல் பிறப்பதில்லையா

மாற்றம் நிகழ்வதில்லையா (2)

அன்பு நீதி நெறியில் நிலைத்தால்

ஆவோம் இன்பக் குடும்பமாகவே

சுவர்கள் வீழ்த்தி பாலம் அமைத்தால்

சுடரும் அமைதி உலகமாகவே

களைவோம் பிரிவையே பிளவையே

காண்போம் உறவையே வாழ்வின் நிறைவையே