♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தாயன்பைத் தேடி வந்தேன் அம்மா அம்மா
என்னை தயவாய் நீ கண்ணோக்கும் அம்மா அம்மா (2)
மாமரி உன் துணைதேடி வந்தோரிலே
யாரும் ஏமாறிப் போனகதை இங்கில்லையே (2)
தாயே தாயே அன்பின் ஆதாரமே
பாதையெல்லாம் அருள் ஒளிகாட்டுமே
வாழ்நாளெல்லாம் நல்ல வழிகாட்டுமே
1. உடலுள்ளம் நலமில்லை பல நோய்களே
ஊரில் மதம் சாதிவெறி கொண்ட பல பேய்களே (2)
மடிமீது தவழும் உன் மகன் பேசினார் - இங்கு
மறையாத நோய்கூட பயந்தோடுமே (2) - தாயே தாயே
2. யார் யாரோ துணை என்று நான் நம்பினேன்
நெஞ்சில் வேறேதோ எண்ணங்கள் நான் அஞ்சினேன் (2)
இல்லை மனம் அன்னைக்கா புரியாதென்று - என்
மாதா உன் பாதத்தில் இளைப்பாற்றுமே (2) - தாயே தாயே