தரணியர் இணைந்து தரும்பலிப் பொருளை தந்தாய் நீ ஏற்பாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தரணியர் இணைந்து தரும்பலிப் பொருளை

தந்தாய் நீ ஏற்பாய் (2)


1. நிதமும் உழைத்த பயனாக

நிலத்தில் விளைந்த பலன் யாவும் (2)

நிறைவுடன் திருமுன் படைக்கையிலே

அனுதின உழைப்பையும் அளிக்கின்றோம்


2. உறவை உணர்த்தும் பலியினிலே

ஒருங்கே உன்னில் இணைந்திடவே (2)

வேற்றுமை தவிர்த்தெம் வாழ்வினிலே

ஒற்றுமை வளர்த்திட அருள்புரிவாய்