சின்னஞ்சிறு பிள்ளைகளே துள்ளி வரும் செல்வங்களே கிறிஸ்மஸ் தாத்தா நானே ஓ கிறிஸ்மஸ் தாத்தா


சின்னஞ்சிறு பிள்ளைகளே துள்ளி வரும் செல்வங்களே

கிறிஸ்மஸ் தாத்தா நானே ஓ கிறிஸ்மஸ் தாத்தா

நல்ல செய்தியோடு கைநிறையப் பரிசும்

தந்திட வந்தேன் நானே ஓ


1. காலை மாலையிலும் மென்மேலும் அன்பு உங்கள்

வாழ்வோடு ஒன்றாகணும்

ஏனோ தானோ என்று வாழாமல் இயேசுவோடு

ஒன்றாக வாழ்ந்தாகணும்

ஆடிப் பாடி சேர்ந்து இந்தப்

பண்டிகையைக் கொண்டாடுவோம்


2. கிள்ளை மொழியில் என்றும் நட்பாக ஒன்றாக

இணைந்தோடி விளையாடுவோம்

கள்ளம் இன்றி நம் உள்ளத்தில் இயேசுவைக்

கனிவோடு நினைந்தாடுவோம்

காரில் இன்பம் சேர்த்து இங்கு

திருநாளைக் கொண்டாடுவோம்


3. கோப தாபங்கள் நாள்தோறும் நம் வாழ்வில்

வந்தாலும் போராடணும்

மாறா இன்பம் தரும் தேவனின் துணையோடு

அஞ்சாமல் ஜெயம் காணணும்

பூமியெங்கும் சேர்ந்து இந்த

நன்னாளைக் கொண்டாடுவோம்