உடல்பொருள் ஆவியெல்லாம் இறைவா உவப்புடன் நான் தருவேன் உழைப்பினில் நான் அடைந்த பலன்களை மகிழ்ந்து நின்பாதம் படைத்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உடல்பொருள் ஆவியெல்லாம் இறைவா

உவப்புடன் நான் தருவேன்

உழைப்பினில் நான் அடைந்த பலன்களை

மகிழ்ந்து நின்பாதம் படைத்தேன்

பாவமில்லாத இதயத்தையே நான்

பரிசாகத் தரவந்தேன் இயலாமல் பாவியாய் மீண்டும்


1. பாவத்திலே நான் மூழ்கிய நாட்களை

மறுபடியும் மண்ணில் பெறுவதில்லை

கறைபடிந்த என் இதயத்தையே நான்

தூயதாய் மீண்டும் பெறுவதுண்டு

உம் அருளாலே இது சாத்தியமாகும்

கருணைக்கண் காக்கும் நாளும்

எம் இறைவா எம் தலைவா

எனையே நான் தருவேன் சரணம் சரணம்


2. நீர் செய்த நன்மைகள் அனைத்தையும் நினைத்தே

கண்ணீரால் நின்பதம் நனைத்தேன்

நன்றியின் பரிசாய் பாவத்தை ஒழித்தேன்

பரிசுத்த வாழ்வை உமக்களித்தேன்

உம் அருளாலே ... ...