உயிரான உணவு வடிவில் இயேசு வருகின்றார் நம் உடன் வாழும் ஆவலோடு தேடி வருகிறார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உயிரான உணவு வடிவில் இயேசு வருகின்றார் - நம்

உடன் வாழும் ஆவலோடு தேடி வருகிறார்

உண்ணும் உணவு நம்மில் இணைந்து ஒன்றாகும்போல்

உள்ளம் ஏற்கும் நம் வாழ்வு இயேசுவாகவே


1. நீதி தேடும் நெஞ்சம் வாழ இயேசு துடிக்கிறார்

அநீதி புரியும் நெஞ்சம் செல்ல இயேசு மறுக்கிறார் (2)

ஒருவர் ஒருவர் புரிந்து வாழும் கூட்டு வாழ்விலே -2

ஒன்றி நின்று உறவை வளர்த்து மகிழ்வு காண்கிறார்


2. உழைத்துக் காய்ந்த கரத்தில் தவழ இயேசு சிரிக்கிறார்

உழைக்காதுண்போர் அருகில் வரவே இயேசு அழுகிறார் (2)

இறைமை கனவை இகத்தில் மலர்த்தும் மாந்தர் மனதிலே -2

இறவா உணவாய் தன்னை இணைத்து உறுதிகொடுக்கிறார்