வானமும் பூமியும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வானமும் பூமியும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை மகன் தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வாரை நம்புகிறோம்


1. பரிசுத்த ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனுவானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறோம்


2. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் மரித்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

மரணத்தின் மீது வெற்றி கொண்டார்


3. பரலோகம் வாழும் தந்தையிடம்

அரியணை கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்


4. பரிசுத்த ஆவியை நம்புகிறோம்

பாரினில் அவர் துணை வேண்டிடுவோம்

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவோம்


5. திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்

புனிதர்கள் உறவை நம்புகிறோம்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

விசுவாசப் பொருளாய் நம்புகிறோம் - ஆமென்