♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எந்தன் நெஞ்சம் பாடும் உந்தன் கவிதை ஆயிரம்
எந்தன் வாழ்வில் காண்பேன் உந்தன் கொடைகள் ஆயிரம் (2)
உன்னைப் பார்த்தேன் உன்னில் மகிழ்வேன் - தினம்
உந்தன் புகழைப் பாடிப்பாடி உள்ளம் மகிழுவேன்
நன்றி இறைவா -2 நன்றி நன்றி நன்றி இறைவா
1. சுரமிசைக்கும் யாழாக எனை மீட்டினாய்
சுகமான நினைவுகளில் எனை நடத்தினாய் (2)
நெஞ்சம் பாடும் உனைப் பாடும்
உனது நினைவு எனது நெஞ்சம் மகிழ்ந்து பாடிடும் - நன்றி...
2. மணம் வீசும் மலராக எனை மாற்றினாய்
மதியாகும் அகல் போல எனை ஏற்றினாய் (2)
குறை நீங்கும் நலமாகும்
உனது வழியில் எனது நெஞ்சம் ஆடிப்பாடிடும் - நன்றி...