♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நானே ஒரு காணிக்கைப் பொருளாக
உம் பீடத்தின் முன் வந்தேன் பணிவாக
தந்தையே ஏற்பாயோ பலியாக (2)
1. சிந்தித்தேன் சிந்தித்தேன் வெகுவாக
சிந்தையில் படவில்லை உயர்வாக (2)
தந்திட்டேன் என்னையே முடிவாக - 2
தந்தையே ஏற்பாயோ பலியாக
2. படைத்திட்டாய் படைப்பை பலவாக
படைப்பு அனைத்தும் எமக்காக (2)
உன் அன்பு கொடைக்கென்னை பரிசாக - 2
தந்தையே ஏற்பாயோ பலியாக