♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவரே அன்பான தேவனே உமக்கே ஆராதனை-2
ஆராதனை - 2 எங்கள் இயேசு ராஜா உமக்கே - 2
1. கல்வாரி நாயகனே உமக்கே ஆராதனை
கண்மணி போல் காப்பவரே உமக்கே ஆராதனை
காலங்களைக் கடந்து வாழ்பவரே
கண்கள் மூடி கரம் குவித்து ஆராதனை
ஆராதனை - 2 எங்கள் இயேசு ராஜா உமக்கே - 2
2. அடைக்கலம் தருபவரே உமக்கே ஆராதனை
அருள்மழை பொழிபவரே உமக்கே ஆராதனை
ஆயிரமாய் அற்புதம் செய்பவரே
சிரம் தாழ்த்தி தாள்பணிந்து ஆராதனை
ஆராதனை - 2 எங்கள் இயேசு ராஜா உமக்கே - 2
3. இனிமை தரும் இனிய நேசரே உமக்கே ஆராதனை
எங்களின் இதய தெய்வமே உமக்கே ஆராதனை
உயிரின் உயிராய் இருப்பவரே
புத்தம் புது கீதங்களால் ஆராதனை
ஆராதனை - 2 எங்கள் இயேசு ராஜா உமக்கே - 2