♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வருக வருக மகிழ்வுடனே வருகவே
வரவு என்றும் இனிதாய் அமைகவே
மங்கள நிலவாய் எங்கும் திகழ்ந்திட
மன்னவன் அருளுடன் என்றும் வாழ்ந்திட
இந்த வானும் நிலவும் காற்றும் கடலும்
யாழும் இசையும் இதமாய் ஒலிக்க வருகவே - 2
1. சுமையின் பளுவால் சோர்ந்திருப்போரே
சுயநலப் பிடியில் சிதைந்திருப்போரே
இறைமகன் இயேசு அழைக்கிறார்
இதயக் கதவை திறந்து உன்னை அழைக்கிறார்
பணிவாய் அவர் பாதம் நாம் அடைந்திடவே - இந்த வானம் ... ...
2. ஆபேல் பலியை விரும்பிய தேவன்
ஆபிரகாம் பலியில் நெகிழ்ந்திட்ட தேவன்
நம்மையே அன்பின் பலியாய் கேட்கிறார்
நம்பியே அவரின் பாதம் சேர்ந்திடுவோம்
நலன்களாலே நம் வாழ்வில் நிறைந்திடவே - இந்த வானம் ... ...