மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை

தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்

பழைய நியம முறைகள் அனைத்தும் மறைந்து முடிவு பெறுக

புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை

அறிய இயலாக் குறையை நீக்க விசுவாசத்தின் உதவி பெறுக

பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும்

புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்

மீட்பின் பெருமை மகிமையோடு

வலிமை வாழ்த்து யாவும் ஆக

இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவியானவர்க்கும்

அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக. ஆமென்