♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே
ஒன்றானவா உருவானவா நின்மலர் பதத்தினில்
எனை மறந்து உனை அடைந்து எழில்அடைந்து பாடுகின்றேன்
1. உனக்காக என் ஜீவன் உயிர் வாழுது
உலகில் நான் உனைக் காணத் துடிக்கின்றது (2)
உன் பார்வை நிதம் காண மனம் ஏங்குது -2
நாளும் பொழுதும் நீ என்னில் மலர
நானிலம் எங்கும் நின்மணம் கமழ
உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனை மறந்து பாடுகின்றேன்
2. உள்ளங்கள் நிதம் தேடும் மகிழ்வானது
உறவில் உன் உறவே சுகமானது (2)
உன் நெஞ்சம் எனக்கென்றும் மடியானது -2
நீயே தானே நினைவினில் மலர
நின் உயிர் தானே எனில் என்றும் வளர
உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனை மறந்து பாடுகின்றேன்