நீலவானின் நிலவுபோல் இனிமை தரும் தேவா இதயத்தைத் திறந்தேன் நான் அன்பே நீ வருவாயா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீலவானின் நிலவுபோல் இனிமை தரும் தேவா

இதயத்தைத் திறந்தேன் நான் அன்பே நீ வருவாயா

வைகறை வசந்தமே என் வாழ்வின் உதயம் நீயாகவா


1. ஆலயம் நுழைந்ததும் அழுகை வருகுது

உன் அன்பின் நினைவினில் நெஞ்சம் மகிழுது

இரவிலும் பகலிலும் உனையே நினைக்கின்றேன்

இன்னிசை கீதத்தால் நிதமும் துதிக்கின்றேன்

என்னில் இனிமேல் வாழ்வது நானல்ல நீ இயேசுவே

அன்பாகவா அருளாகவா இதய வேந்தே வா


2. கேட்பதைக் கொடுத்திடும் இரக்கம் மிகுந்தவர்

நான் செல்லும் வழியெல்லாம் துணையாய் வருபவர்

உமக்காக வாழ்ந்திட உலகை மறந்தேனே

துன்பங்கள் துயரங்கள் ஏற்று மகிழ்ந்தேனே

எனக்கெல்லாம் நீ இயேசுவே நீயில்லையேல் நானில்லையே

உயிராகவா உறவாகவா என்னோடு வாழ வா