நன்றி கீதம் நான் பாடுவேன் இயேசுவே நாளும் உந்தன் அன்பில் வாழுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நன்றி கீதம் நான் பாடுவேன் இயேசுவே

நாளும் உந்தன் அன்பில் வாழுவேன்

நன்றி இறைவா நன்றி நாதா -2


1. புதுமையான அன்பு நீர் பொழிந்த தியாக அன்பு

புதிய வாழ்வு கண்டேன் நான் புதியவனானேன் (2)

அதனால் புதிய ராகம் மீட்டி புது ஜதியில் மேளதாளங்கட்டி


2. பயனில்லாத என்னில் நீ பரிவு பொழிந்த போது

பசுமை என்னில் கொண்டேன் நான் பலன்மிகக் கண்டேன் (2)

உந்தன் புனிதத் தேகம் இரத்தம்

என் இதயத் தாகம் தீர்ந்ததையா