என் தேவனே என் இறைவனே உம்மை எந்நாளும் போற்றிடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் தேவனே என் இறைவனே

உம்மை எந்நாளும் போற்றிடுவேன்

உம்மை எந்நாளும் பாடிடுவேன் (2)


1. கண்ணிழந்தோர் பார்த்திடக் கண்டேன்

இறை இயேசுவின் கருணை அதில் கண்டேன் (2)

விண்ணிழந்தோர் அதைப் பெறக் கண்டேன் -2

இறை இயேசுவின் மனதை அதில் கண்டேன்

உடலில் ஒளி வீசிடக் கண்டேன்

இறை இயேசுவின் மகிமை அதில் கண்டேன் (2)


2. கடல்களிலே பெரும் அமைதி கண்டேன் -2

இறை இயேசுவின் தன்மை அதில் கண்டேன்


3. எளியவரும் மகிழ்ந்திடக் கண்டேன்

இறை இயேசுவின் இன்பம் அதில் கண்டேன் (2)

ஒளிவிளக்காய்த் திகழ்ந்திடக் கண்டேன் - 2

இறை இயேசுவின் தூய்மை அதில் கண்டேன்