எல்லா வரமும் நிரம்பித் ததும்பும் திவ்ய ஸ்பிரித்து சாந்துவே அடியோர் உள்ளத்தில் எழுந்து வருவீர்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எல்லா வரமும் நிரம்பித் ததும்பும்

திவ்ய ஸ்பிரித்து சாந்துவே

அடியோர் உள்ளத்தில் எழுந்து வருவீர்

இனிய ஸ்நேக தேவனே (2)


1. உலக இருளை அகற்ற உமது பரலோக ஒளி தாருமே 2

உம்மைக் கண்டு நன்மை பெற நாதனே அருள் புரிகுவாய்


2. நன்மை பயக்கும் ஞானக் கொடைகள்

யாவும் அளிப்பாய் பரமனே (2)

நல்வழியை நாங்கள் கண்டு நற்கதி பெறச் செய்குவாய்


3. ஞானம் புத்தி விமரிசையுடன் அறிவு திடம் பக்தியும் - 2

தெய்வப் பயமான வரங்கள் ஏழும் எமக்கு ஈவாயே