பலியிட வருகின்றேன் என்னை பலியென தருகின்றேன் சிந்தனை சொல் செயல் உனக்காக சிந்தும் நல் வியர்வையும் உனக்காக

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பலியிட வருகின்றேன் என்னை பலியென தருகின்றேன்

சிந்தனை சொல் செயல் உனக்காக

சிந்தும் நல் வியர்வையும் உனக்காக (2)

மகிழ்வுடன் தருகின்றேன்


1. இயற்கை தந்த நலன்கள் இறை நீ தந்த வளங்கள்

மண்ணில் விளைந்த மணிகள்-2 மனிதம் நாடும் மனங்கள்

மகிழ்வுடன் உன்பதம் படைக்கின்றேன்

மனம்நிறை பலியென ஏற்றிடுவாய்


2. வாழ்வில் மகிழும் கணங்கள் தாழ்ந்து வருந்தும் தருணம் -2

உழைப்பில் உயரும் உணர்வும் -2

உலகை உயர்த்தும் பணியும் - மகிழ்வுடன்