♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எல்லாம் உமதே எதை நான் தருவேன்
ஏந்தலே உன்மனம் இசைத்திட வாழ்வேன் (2) எல்லாம் உமதே
1. கரங்களும் உயர்ந்தன கனவுகள் வளர்ந்தன
கருணையின் திறம் கண்டு கண்களும் பனித்தன (2)
இதுவரை வாழ்ந்த உன் அருள் கொடையே
இதில் என் செல்வமோ உன் அன்பு உறவே
அன்பே ஏற்றிடுவீர் என்னைப் பணியில் உயர்த்தச் செய்வீர்
2. பகிர்வுகள் வளர்ந்தன உறவுகள் நிலைத்தன
அர்ப்பணத் திறம் கண்டு ஆனந்தம் பெருகின (2)
இனியொரு உலகம் இனிதாய்ப் படைப்போம்
அதில் வரும் தடைகளை அன்பினால் தகர்ப்போம்
அன்பாய் ஏற்றிடுவீர் இந்தத் தரணியை மாற்றிடுவீர்