அண்ணலே செபஸ்தியாரே அருள்தணலே எம் காவலே


அண்ணலே செபஸ்தியாரே அருள்தணலே எம் காவலே

உம்மைக் கொண்டாடி மகிழும் எம் வாழ்வு தழைக்க

மன்றாடி அருள் புரிவீர் எமக்காய்


1. மெய்மறை வீரரென உலகம் மெச்சும்படி வாழ்ந்தவரே

பொய்யுரும் நெஞ்சங்களைத் தேற்றி

விசுவாசம் பொழிந்தவரே

நோய்நொடி போக்கி நற்செய்தி சொல்லி

இயேசுவுக்காய் உயிர் துறந்தவரே வாழ்க வாழ்க


2. இயேசுவின் அன்பினின்று உம்மை

எதுவும் பிரிக்கவில்லை

அம்புகள் ஈட்டிகளால் உந்தன் ஆன்மா அழியவில்லை

நாங்களும் உம்மைப் போல் விசுவாசம் காத்து

நிறைவாழ்வு அடைய அருள்வீரே வாழ்க வாழ்க