♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மாறாத நேசம் எனில் தந்த தேவா
மனதென்னும் கோயில் உனக்காக நீ வா (2)
உளம் என்னும் வீணை கரம் தேடுதே
உறவே நீ என்னில் சுரம் மீட்ட வா
1. ஆறுதல் தேடி அலைகின்ற போது
ஆதவன் நீயே ஆறுதல் தந்தாய் (2)
துயரினில் மூழ்கி மடிந்திடும் வேளை
துணையாக வந்தாய் துயரெல்லாம் மறந்தேன் -2
போற்றுவேன் தேவா போற்றுவேன்
உன் திருவடி பணிந்து போற்றுவேன் (2)
2. உன்னருள் தேடி உன் பதம் வந்தேன்
உலகாளும் தேவா உன்னருள் தந்தாய் (2)
உனக்காக வாழ உறவெல்லாம் துறந்தேன்
அழியாத உறவாய் எனில் வந்து சேர்ந்தாய் -2