ஞானம் நிறை கன்னிகையே நாதனைத் தாங்கிய ஆலயமே

1. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

2. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஞானம் நிறை கன்னிகையே

நாதனைத் தாங்கிய ஆலயமே

மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2

பலிபீடமுமாய் அலங்கரித்தாயே


1. பாவ நிழலே அணுகா பாதுகாத்தார் உமையே பரமன்

பாவ நிழலே அணுகா - தாயுதரம் நீ தரித்திடவே 2

தனதோர் அமலன் தலமெனக் கொண்டார்


2. வாழ்வோர் அனைவரின் தாயே வானுலகை அடையும் வழியே

வாழ்வோர் அனைவரின் தாயே

மக்கள் இஸ்ராயேல் தாரகையே - 2

வானோர் துதிக்கும் இறைவியே வாழி