எந்த ஒரு சாதரண மனிதரும் புனிதர் ஆகலாம்..குருக்கள், கன்னியர்கள், துறவிகள் மட்டுமல்ல, குடும்பத்தில் இருப்பவர்கள் கூட ஒருத்தல் ஜெப தவ ஒறுத்தல் வாழ்வும், தனக்கு வரும் துன்பங்களை பொறுமையோடு சகித்துக்கொண்டு அதை தன் மனமாற்றத்திற்காகவும், மற்றவர் மனம் மாறிடவும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.. மிகவும் எளிய அதே வேளை சற்று கடினமான பாதைதான் புனிதர்கள் பாதை..
" என்னை பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து நாள்தோறும் தன் சிலுவையை தூக்கி கொண்டு என்னை பின் செல்லட்டும்" என்று இயேசு சுவாமி சொல்லிய வார்த்தைகளை அப்படியே தன் வாழ்க்கையாக்கி ஜெயித்தவர்கள்..
ஒரு காலத்தில் நம் இயேசுவுக்காக தன் ரத்தங்களை சிந்தி திருச்சபையை வளர்த்தார்கள்.. காலப்போக்கில் தன் ஜெப தவ ஒறுத்தல் வாழ்வால் துன்பங்களை சுமந்து லட்சக்கணக்கான ஆன்மாக்களை மனம் திருப்பினார்கள்.. சிலுவை இல்லாமல் கிறிஸ்த்தவம் இல்லை.. மற்ற சபைகள், போதகர்கள் சிலுவையை மறந்தாலும்... சிலுவை இல்லாமல் அதாவது துன்ப துயரங்கள் இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை.. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அதற்காகவே அழைக்கப்பெற்றவர்கள்..அதிலும் குறிப்பாக கத்தோலிக்கர்கள்.... நம்மால் முடிந்த அளவு ஆன்மாக்களை இயேசுவுக்காய் பெற்றுத்தர வேண்டும்.. சும்மா பெயரளவில் வாழ்வது கிறிஸ்தவம் இல்லை..நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும்..
ஒரு கிறிஸ்தவன் நல்ல கிறிஸ்தவனாக வாழ்ந்தாலே அவன் புனிதனாகி விடுவான்(ள்)...
பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும், சகலத்தையும் மன்னிக்கும் மனதோடும் வாழ முயற்சி செய்ய வேண்டும்....
இன்றைய நாளில் அனைத்து புனிதர்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி கூறி அவர்களை பின்சென்று இயேசுவை அடைய அவர்கள் துணையை வேண்டுவோம்
அனைத்து நண்பர்களுக்கும் அனைத்து புனிதர்கள் திருவிழா நல்வாழ்த்துக்கள்...
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!