என்னை உன்னில் இணைக்க வந்தேன் ஏற்றுக்கொள்வாயா தொடரும் பயணம் பாதம் வைத்தேன் ஏற்றுக்கொள்வாயா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னை உன்னில் இணைக்க வந்தேன் ஏற்றுக்கொள்வாயா

தொடரும் பயணம் பாதம் வைத்தேன் ஏற்றுக்கொள்வாயா

இறைத் தியாக வாழ்வை நானும் வாழ

அர்ப்பணம் என்னை தருகின்றேன்

ஏற்றுக்கொள்வாயா என் வாழ்க்கைப் பயணம் முழுவதும்

அருள் புரிவாயா என் இலட்சியப் பயணம் தொடர்ந்திட


1. தலைவன் என்னில் வாழும்போது தனிமை என்னை வாட்டுமோ

தந்தை அன்பில் தழைக்கும்போது

தடைகள் யாதெனை தீண்டுமோ (2)

உலக வாழ்வின் தளைகளே உந்தன் சாயல் மறுத்து வாழ்கிறேன்

இறைச்சாயல் ஒளிர மாண்பு மிளிர

உந்தன் பாதம் படைக்கின்றேன்


2. உண்மை வழியில் நடக்கும்போது உலகம் என்னைத் தூற்றுமோ

உந்தன் உறவில் முழுமைகாண உலக உறவுகள் மறுக்குமோ (2)

மனிதநேயம் மடிந்தது இன்று இறைமை மண்ணில் வீழ்ந்தது

உண்மை வழியில் நடக்க உறவில் மலர

உந்தன் பாதம் படைக்கின்றேன்