♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
சின்னக் குழந்தை எங்கள் செல்லக் குழந்தை
பாவம் போக்கிட மனுவாய் வந்தவர் (2)
இயேசு பாலனே எங்கள் இயேசு பாலனே
உம்மைப் போற்றிப் பாடுவேன் மனம் வாழ்த்திப் போற்றுவேன்
சின்னக் குழந்தை எங்கள் செல்லக் குழந்தை
பாவம் போக்கிட மனுவாய் வந்தவர்
1. அன்பின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
பாவியென் அடைக்கலமாய் பாசத்தின் நாயகனாய் (2)
பூத்த நறுமலரே உம்மைப் போற்றிப் பாடுவேன்
பூத்த சிறுமலரே மனம் வாழ்த்திப் போற்றுவேன்
பாடுவோம் வாழ்த்திப் பாடுவோம் பாடுவோம் போற்றிப் பாடுவோம்
2. விண்ணில் ஆட்சியாய் விண்மீன் காட்சியாய்
இடையர்கள் சாட்சியாய் மனுக்குல மாட்சியாய் (2)
பூத்த நறுமலரே உம்மைப் போற்றிப் பாடுவேன்
பூத்த சிறுமலரே மனம் வாழ்த்திப் போற்றுவேன்
பாடுவோம் வாழ்த்திப் பாடுவோம் பாடுவோம் போற்றிப் பாடுவோம்