அப்பா நீ இருக்க தப்பாக வாழ்ந்து வெகு தூரம் சென்று விட்டேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அப்பா நீ இருக்க தப்பாக வாழ்ந்து

வெகு தூரம் சென்று விட்டேன் (2)

இப்போது வருந்தி வருகின்றேன் - 2

ஏற்றிட வேண்டுகின்றேன் - இறைவா


1. பாவத்தின் அகலப் பாதையிலே பாதாளம் சேர்ந்துவிட்டேன்

பன்றிகள் போல சகதியிலே பல்லாண்டு வாழ்ந்துவிட்டேன்

அப்பா அப்பா - 3

திருந்தி நான் திரும்புகின்றேன் என்னை தயவாய் தாங்கிடுவாய்

மகனென்ற நிலை இழந்தேன் என்னை மனதார ஏற்றிடுவாய்


2. மோகத்தின் மாய சேற்றினிலே மயங்கி நான் மதி இழந்தேன்

போதையின் அடிமைப் பாதையிலே மனம்போல வாழ்ந்துவந்தேன்

அப்பா அப்பா - 3

கலங்கி நான் கதறுகிறேன் என்னைக் கனிவாய் காத்திடுவாய்

மனம் நொந்து வருந்துகின்றேன் என்னை மனதார ஏற்றிடுவாய்