♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அன்பர் இயேசு அருகில் இருக்க
எந்தத் துன்பமும் நமக்கில்லை
உண்மைத் தெய்வம் நமக்குள் இருக்க பயமுமில்லையே (2)
ஒன்று கூடுவோம் சேர்ந்து வாழ்வோம்
இறைவன் ஆட்சி மண்ணில் அமைப்போம் (2)
1. பயணம் தூர சென்றாலும் பயங்கள் இல்லையே
பாதை தடுமாறினாலும் கவலையில்லையே (2)
நம் ஆயன் நம்மோடு இருக்கின்றபோது
அன்போடு தோளில் நம்மைத் தாங்கிக் கொள்கிறார் (2)
ஒன்று கூடுவோம் ... ...
2. சொந்த பந்தம் அழிந்தாலும் தனிமை இல்லையே
நோய்கள் நம்மை அழித்தாலும் மரணம் இல்லையே (2)
நம் இயேசு நம்மோடு இருக்கின்றபோது
வாழ்வாக நம்மை என்றும் நிறைவு செய்கின்றார் (2) ஒன்று...