♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பரலோகம் வாழும் தந்தையே உம் திருநாமம்
என்றுமே போற்றப்படுவதாக (2)
வரணும் உமது அரசு நிறைவேறணும் உமது சித்தம்
விண்ணிலும் மண்ணிலும் உமது புகழே என்றும் வாழணும்
1. எங்களது உடமைகளை பகிர்ந்து வாழ முடிவு செய்தோம்
அனுதின உணவை இன்று எங்களுக்கு தந்தருளும்
எங்களுக்குத் தீமை செய்தோரை மன்னித்தோம் அன்புசெய்தோம்
எங்களது பாவங்களையும் மன்னித்தே அருள்புரியும் (வரணும்...)
2. உம்மோடு விழித்து வாழ மனதில் இன்று உறுதி கொண்டோம்
எங்களை சோதனையில் விழுந்துவிட விடாதேயும்
உம்மைப் போல் நன்மைகள் ஒன்றே
செய்வதென துணிந்துவிட்டோம்
தீமைகள் அனைத்தினின்றும்
எங்களை நீர் காப்பாற்றும் (வரணும்)