அர்ப்பணப் பூக்களை அன்புடன் ஏந்தி ஆனந்த இல்லம் செல்வோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அர்ப்பணப் பூக்களை அன்புடன் ஏந்தி

ஆனந்த இல்லம் செல்வோம் - அங்கு

ஆயிரம் விளக்குகள் பீடத்தில் ஏந்தி

அவருக்கு நன்றி சொல்வோம்


1. உம் பெரும் கருணை நலன்களை சுவைத்தோம்

உம் திரு நிழலில் அமைதியை உணர்ந்தோம்

தடைகளைக் கடக்க உமதருள் அடைந்தோம்

நிலையான அன்பிது நிதமுமைத் தொடர்வோம்

நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம்


2. உம் அருள்மொழியின் பலன்களை சுவைத்தோம்

உம் திருக்கரத்தின் வலிமையை உணர்ந்தோம்

அலையென மேவிடும் துயர்களைக் கடந்தோம்

அளவில்லா அன்பிது உன்னடி பணிந்தோம்

நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம்