விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே

உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!

உமது ஆட்சி வருக

உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல

மண்ணுலகிலும் நிறைவேறுக


1. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்

எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை

நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்

எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,

தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்